Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs August 10, 2017

TNPSC Tamil Current Affairs August

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs August 10, 2017 (10/08/2017)

 

Download as PDF

தலைப்பு : தேசம், சமீபத்திய நாட்குறிப்புகள்

தேசிய குடற்புழு நீக்குதலின் இரண்டாவது கட்டம் ஆரம்பம்

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2 வது சுற்று தேசிய குடற்புழு நீக்குதலின் இரண்டாவது கட்டத்தினை (NDD-National Deworming Day) 2017 ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளது.

தேசிய குடற்புழு நீக்குதலினை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

இந்த NDD திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 14 வயதிற்கும் குறைவான 220 மில்லியன் குழந்தைகள் மண்வழி பரவும் ஹெல்மின்த்ஸ் (STH) தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது என்று WHO மதிப்பிட்டுள்ளது.

தேசிய குடற்புழு நீக்குதல் தினம் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் 1-19 வயதில் உள்ள அனைத்து குழந்தைகளையும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி குடற்புழுக்கள் நீக்கப்படுகிறது.

மேலும் இதில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்நிகழ்வு நடைபெறுகிறது.

ஏனெனில், இந்த இரண்டு மாநிலங்களில் குழந்தைகளில் மண் பரவும் ஹெல்மின்த்ஸ் (STH) பாதிப்பு 20% க்கும் குறைவாகவே உள்ளது.

முக்கிய குறிப்புகள்:

மண் பரப்பும் ஹெல்மின்த்ஸ் (STH) நோய் அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவுகிறது.

அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளிலும், அஞ்சான் வாடிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இம்மாத்திரைகள் நீரிழிவு குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான திறனை கொண்டுள்ளது.

‘ஆல்பெண்டசோல்’ என்று அழைக்கப்படும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை புழு தொல்லைகளைக் கட்டுப்படுத்த ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

_

தலைப்பு : சமீபத்திய நாட்குறிப்புகள்

உலக உயிர் எரிபொருள் நாள்: 10 ஆகஸ்ட் 2017

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று, புதைபடிவ எரிபொருள்களை (பசுமை எரிபொருள்கள்) பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக உலக உயிர் எரிபொருள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்:

இந்த நாளில் 1893 ஆம் ஆண்டில் சர் ருடால்ப் டீசல் (Sir Rudolph Diesel) (டீசல் என்ஜினின் கண்டுபிடிப்பாளர்) முதன்முறையாக நிலக்கடலை எண்ணெயில் இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார்.

ஆகையால், இந்த அசாதாரண சாதனையை அடைந்ததை நினைவுகூரும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ம் தேதி உலக உயிரி எரிபொருள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

தலைப்பு : சர்வதேச நிகழ்வுகள்

கத்தார் நாடு – இந்தியாவையும் சேர்த்து 80 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை வழங்கியுள்ளது

கத்தார் நாட்டின் வளைகுடா நாடுகளில் அண்டை நாடுகளால் சுமத்தப்பட்ட இரண்டு மாதகால புறக்கணிப்பு காரணமாக, 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதி வழங்குவதாக கத்தார் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

வாயுக்கள் மற்றும் எண்ணெய் நிறைந்த நாடான கத்தரில் 2022ம் ஆண்டில் நடைபெறும் கால்பந்தாட்ட உலகக் கோப்பையை காண வருகை தரும் வகையில் ஐரோப்பா, மற்றும் பிற நாடுகளான இந்தியா, லெபனான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா உட்பட நாடுகளிலிருந்து வரும் நாட்டவர்கள் இப்போது சுற்றுலா விசாக்களைப் பெறுவார்கள்.

 

தலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள், செய்தி நபர்கள்

டாக்டர் மகேந்திரநாத் பாண்டே சைகை மொழியில் இந்திய தேசிய கீதம் வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளார்

புதுடில்லியில் ஒரு விழாவில், இந்திய தேசிய கீதம் வீடியோ சைகை மொழியில் மாநில மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவில், அமிதாப் பச்சனுடன் இணைந்து குழந்தைகள் சைகை மொழியில் தேசிய கீதத்தை செங்கோட்டையில் முன்னின்று பாடுகின்றனர்.

இது கோவிந்த் நிஹலனி (Govind Nihalani) இயக்கி மற்றும் இசையமைப்பாளர் (ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா) Aadesh Shrivastava இசைமைத்துள்ளார்.

_

தலைப்பு: சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழா

ஆகஸ்ட் 9, 2017 அன்று ராஷ்டிரபதி பவனில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 வது ஆண்டு விழாவின் போது இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, 1942 சுதந்திரப் போராட்டத்தினை குறிக்கும் பொருட்டு ஜனாதிபதி 8 அஞ்சல் தபால் தலைகளை வெளியிட்டுள்ளார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி:

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) 1942 இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகும்.

இவ்வியக்கம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது.

இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

பிரித்தானிய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றியது.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version