[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.26, 2016 (26/10/2016)
தலைப்பு : விருதுகள் மற்றும் நன்மதிப்புகள் – புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்
2016 மேன் புக்கர் பரிசு
பால்பீட்டியின் அவரது இனவெறிதாக்குதல் சார்ந்த நாவலான “திசெல்அவுட்” (The Sellout), 2016க்கான மேன் புக்கர் பரிசினை வென்றுள்ளது.
அவர் முதன் முதலாக இந்த விருதினை பெறும் அமெரிக்க ஆசிரியர் ஆவார்.
பால் பீட்டி பற்றி:
அவர் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.
The white boy shuffle (1996), Tuff (2000), Slumberland (2008)ஆகியவை அவரது மற்ற படைப்புகள் ஆகும்.
அவருக்கு தேசிய புத்தகங்கள் விமர்சகர் விருது, மேன் புக்கர் விருது பெற்ற அதே நாவலின் மூலம் அள்ளிச் சென்றார்.
“திசெல்அவுட்” பற்றி:
இந்த நாவல் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு புறநகர் பகுதியில் வாழும் ஒரு இளம் கருப்புமனிதன், அடிமைத்தனம் மற்றும் இனவேற்றுமையை மறுபடியும் அமர்த்த முயற்சிக்கும் கதை.
மேன் புக்கர் பரிசு பற்றி:
மேன் புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மொழியின் சிறந்த உண்மையான நாவலுக்கு வழங்கும் ஒரு இலக்கிய பரிசு ஆகும். ஒரு குழு மூலம் 1969-ல் இருந்து கொடுக்க ஆரம்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அக்குழு தொடங்கப்பட்ட காலத்தில், இந்த விருது காமன்வெல்த், ஐரிஸ், ஜிம்பாப்வே குடிமக்களுக்கு மட்டுமே அந்த தகுதி இருந்தது. 2013 ஆம் ஆண்டில் அதன் தகுதியை அனைத்து ஆங்கிலப் புதினங்களுக்கும் வழங்க விரிவடைந்துள்ளது.
2015 மேன் புக்கர் பரிசு வென்ற ஜமைக்காவின் மார்லன் ஜேம்ஸ், அவரது வரலாற்று நாவல், “A brief history of seven killings” என்ற புதினத்திற்காக இவ்விருதினை பெற்றார்.
தலைப்பு : தற்போதைய சமூக – பொருளாதார சிக்கல்கள் – சமூகத்தில் பெண்கள் பிரச்சினைகள் – பெண்களுக்கு அதிகாரமளித்தல்
உலக பொருளாதார சம்மேளனத்தின் (World Economic Forum) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2016
உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2016 ல், இந்தியா 144 நாடுகளில் 87 வது இடத்தினை பிடித்துள்ளது.
ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன், ருவாண்டா ஆகியவை பட்டியலின் முதல் ஐந்து நாடுகள் ஆகும்.
அறிக்கை பற்றி:
இந்த கணக்கெடுப்பு, ஒரு அடிப்படை தேவைகளான கல்வியறிவு பெறுதல், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பெறுதல், பொருளாதார வாய்ப்பு மற்றும் அரசியல் ரீதியில் ஆண், பெண் சமத்துவம் மற்றும் முன்னேற்றம் போன்ற அளவிடும் காரணிகள் அடிப்படையில் உலக பொருளாதார அரங்கின் (WEF) மூலம் செய்யப் படுகிறது.
இந்திய அறிக்கையின் உண்மைகள் :
கடந்த ஆண்டு அறிக்கையோடு ஒப்பிடும்போது, இந்தியா கல்வியறிவில் 125வது இடத்திலிருந்து 113வது இடத்திற்கு சென்று முன்னேறியுள்ளது.
சுகாதார மற்றும் வாழ்வாதாரத்தில், இந்தியா 143வது இடத்தில இருந்து 142வது இடத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார வாய்ப்பு இந்த ஆண்டில், இந்தியா 139வது இடத்திலிருந்து 136 வது இடத்திற்கு சென்று மேம்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரத்தில், இந்தியா உலக அளவில் கடந்த ஆண்டு இருந்த அதே 9 வது இடத்தில் உள்ளது.
தலைப்பு : தற்போதைய சமூகப் – பொருளாதார பிரச்சனைகள் – இந்தியா மீது உலகமயமாக்கலின் விளைவுகள்
2017 வணிகத்தில் : அனைவருக்கும் சம வாய்ப்பு
உலக வங்கி வெளியிட்டுள்ள குறியீட்டீல், எளிதாக வணிகம் செய்து முன்னேறும் ஒரு அறிக்கையில் 130வது நிலையில் இந்தியா வைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க், ஹாங்காங், தென் கொரியா ஆகியவை முதல் 5 இடங்களை பெற்ற நாடுகளில் உள்ளன.
இந்தியா பூட்டான் (73), சீனா (78), நேபால் (107), இலங்கை (110) போன்ற தனது பக்கத்து நாடுகளை விட குறைந்த தர வரிசையிலும் மற்றும் பாக்கிஸ்தான் (144) மற்றும் வங்காளம் (176) விட அதிக தர வரிசையையும் பெற்றுள்ளது.
தலைப்பு : தேர்தல் நடத்தை சிக்கல்கள்
தேர்தலில் மின் தபால் வாக்குப்பெட்டி
அரசாங்கம் மின்னணு தபால் வாக்குச்சீட்டின் மூலம், ஆயுதப்படைகள் உட்பட அனைத்து பணியிலுள்ள வாக்காளர்களும் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க, தேர்தல் நடத்தை விதி 23, 1961 திருத்தப்பட்டுள்ளது.
இதன் வேலை யாது?
புதிய விதிகளின்படி, பணியிலுள்ள வாக்காளர்கள் அனைவரும் ஆயுதப் படைகளிடம் இருந்து வரும் பணியாளர்கள் உட்பட, இப்போது தங்கள் விருப்ப வாக்குகளை குறிக்க அவர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பி வைக்கப்படும் ஒரு வெற்று பின் வாக்குச்சீட்டை பதிவிறக்கம் செய்து அதனை மீண்டும் அந்தந்த அதிகாரிகளுக்கு செல்லுமாறு அதனை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். இது ஒரு வழி பரிமாற்ற அமைப்பாக உள்ளது. அனுப்புவது பாதுகாப்பானது என்பதால் அதனை திரும்ப இணையம் மூலம் பூர்த்தி செய்து அனுப்ப ஊக்கம் இல்லை.
இந்த அமைப்பின் நன்மைகள்:
இந்த அமைப்பு, தபால் சேவைகள் மூலம் வாக்குச் சீட்டினை இன்றைய இரண்டு வழி தகவல் அனுப்பும் முறையின் மூலம் ஏற்படும் தாமதத்தினை குறைக்கிறது.
கிராமங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் ஆயுதப்படைகள் மற்றும் பணியிலுள்ள வாக்காளர்கள், தபால் சேவைகள் மூலம் இரண்டு வழி தகவல் பரப்பு ஒழுங்குமுறையின் வாக்குச் சீட்டில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால் இவ்வமைப்பினால் பெரிதும் பயனடைந்தனர் வேண்டும்.
[/vc_column_text][/vc_column][/vc_row]