
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.27, 2016 (27/09/2016)
ஏழு புதிய தாவர இனங்கள் தேசத்திற்கு அர்ப்பணிப்பு – பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியின் (சிஎஸ்ஐஆர்) 75 வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி (பிளாட்டினம் ஜூப்ளி), ஏழு புதிய மேம்படுத்தப்பட்ட தாவர இனங்களை இந்திய தேசத்திற்காக அர்ப்பணித்துள்ளார்.
தாவரங்கள் பற்றி:
மஞ்சள் தூள் வகைகள் (பிதாம்பெர்), நறுமண வெட்டிவேர் (Khus), லில்லி மலர்கள், கெர்பேரா மலர்கள், எலுமிச்சை புல், சிட்ரோனெல்லா வகைகள் மற்றும் ரோஜாக்களின் வகைகள் போன்றவை சிஎஸ்ஐஆர்-ல் இருந்து அர்ப்பணிக்கப்பட்ட புதிய மேம்படுத்தப்பட்ட தாவரங்கள் ஆகும்.
DRUZHBA -2016
DRUZHBA -2016 என்பது ரஷியன் மற்றும் பாகிஸ்தான் படைகள் இணைந்த ஒரு கூட்டு ராணுவப்பயிற்சி ஆகும்.
DRUZHBA என்பது நட்புணர்வு என்று பொருள்படும்.
இப்பயிற்சி இரு ராணுவத்தினார்க்கிடையே ஒற்றுமை மற்றும் இராணுவ ஒத்துழைப்பை கொண்டுவர நடத்தப்படுகிறது.
உலக சுற்றுலா தினம்
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), செப்டம்பர் 27, 1980 ஆம் ஆண்டு முதல் அந்நாளை உலக சுற்றுலா தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
2016 சுற்றுலா தினத்தின் உட்கரு : “அனைவருக்கும் சுற்றுலா – உலகளாவிய சுற்றுலா அணுகுமுறைக்கு ஊக்குவிக்கும்”
இந்த நாள் பற்றி:
1970 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27 அன்று UNWTO அதன் பிரமாணங்களை ஏற்றுக்கொண்டது. இந்த சட்டங்களை பின்பற்றுதல் உலக சுற்றுலாவின் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
இயற்கையின் பாரம்பரிய அந்தஸ்து சிறந்த மரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
“இயற்கை பாரம்பரிய மரங்கள்” என 16 சிறப்பு மரங்களை தில்லி மாநில அரசு (என்.சி.ஆர் – வடக்கு தலை நகரப் பகுதி) அறிவித்தது.
முக்கிய அம்சங்கள்:
சுற்றுச்சூழல் பசுமையைக் பாதுகாக்கும் பொருட்டு, பிகாஜிக்காமா (Bhikajikama) இடத்திலுள்ள ஆலமரம், ராஜ் காட் நினைவிடத்தில் உள்ள அர்ஜுனா மற்றும் அசோகா மரங்கள், லோதி தோட்டத்திலுள்ள மா மரம், குதுப் மசூதி அருகே உள்ள சால்வடோரா மரம், இந்தியா கேட் அருகேயுள்ள ஆலமரம் மற்றும் ஆரவல்லி மற்றும் என்.சி.ஆர் சுற்றி உள்ள சிறந்த மரங்களை தில்லி அரசு இயற்கை பாரம்பரிய மரங்கள் என அறிவித்துள்ளது.
குர்கான் – குறுகிராமம் (GURUGRAM) என்று பெயர் மாற்றியது
மத்திய அரசு, குர்கான் நகரின் பெயரை குறுகிராமம் (GURUGRAM) என மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நகரம் பற்றி:
குர்கான், ஹரியானாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மேலும் அது மில்லினியம் நகரம் என அழைக்கப்படுகிறது.
குர்கான் நகரம் ஹரியானா மாநிலத்தின் ஒரு மிகப்பெரும் தொழில்துறை மற்றும் நிதி மையமாக திகழ்கிறது.
1 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep.27, 2016 (27/09/2016)"